/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ்நாடு சிறப்பு காவல்படை7ம் அணி வளாகத்தில் நுாலகம்
/
தமிழ்நாடு சிறப்பு காவல்படை7ம் அணி வளாகத்தில் நுாலகம்
தமிழ்நாடு சிறப்பு காவல்படை7ம் அணி வளாகத்தில் நுாலகம்
தமிழ்நாடு சிறப்பு காவல்படை7ம் அணி வளாகத்தில் நுாலகம்
ADDED : பிப் 07, 2025 01:07 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 7ம் அணி செயல்பட்டு வருகிறது. போலீசாக தேர்வு செய்யப்பட்டவர்கள், அதேபோல் போலீஸ் பயிற்சியில் உள்ளவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என, 800க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பணியிலுள்ள நேரம் போக மற்ற நேரங்களில், இலக்கியம், கவிதை, பொது அறிவுத்திறனை மேன்மேலும் வளர்க்க ஏதுவாக, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 7ம் அணி எஸ்.பி., சங்குவின் துரித நடவடிக்கையால், நேற்று, 'குறிஞ்சி நுாலகம்' திறக்கப்பட்டது. இந்த நுாலகத்திற்கு பலதரப்பட்ட தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி., சங்கு கூறுகையில், ''இந்த நுாலகத்தில் 4,000க்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன. 7ம் அணி வளாகத்திலுள்ள அனைத்து அலுவலர்கள், போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நுால்களை படித்து பயன்பெற வேண்டும்,'' என்றார்.

