/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரியில் 7,113 பயனாளிகளுக்குரூ.5.78 கோடியில் நலத்திட்ட உதவி
/
கி.கிரியில் 7,113 பயனாளிகளுக்குரூ.5.78 கோடியில் நலத்திட்ட உதவி
கி.கிரியில் 7,113 பயனாளிகளுக்குரூ.5.78 கோடியில் நலத்திட்ட உதவி
கி.கிரியில் 7,113 பயனாளிகளுக்குரூ.5.78 கோடியில் நலத்திட்ட உதவி
ADDED : மார் 07, 2025 02:17 AM
கி.கிரியில் 7,113 பயனாளிகளுக்குரூ.5.78 கோடியில் நலத்திட்ட உதவி
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2024 நவ.,ல் பெஞ்சல் புயலால், 7,585 ஏக்கர் பரப்பில், 6,884 விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்ததாக கணக்கெடுக்கப்பட்டது. அவர்களில் ஒவ்வொரு பகுதியினருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று பெஞ்சல் புயலால் பாதிப்படைந்த, 7,525 பேருக்கு, 5.55 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு நலத்திட்டங்கள் உள்பட, 7,113 பயனாளிகளுக்கு, 5.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, 6 பகுதி நேர ரேஷன் கடை, ஒரு முழு நேர ரேஷன் கடை மற்றும், 100 பேருக்கு ரேஷன் அட்டைகளையும் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், புதிய வழித்தடம், வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட, 7 பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.