தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் 72.96 சதவீத ஓட்டுப்பதிவு

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் 72.96 சதவீத ஓட்டுப்பதிவு

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் 72.96 சதவீத ஓட்டுப்பதிவு


ADDED : ஏப் 20, 2024 09:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 09:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில், 72.96 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி. இந்த தொகுதியில் மொத்தம், 8 லட்சத்து, 14 ஆயிரத்து, 76 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 8 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்கள், 305 இதரர் என மொத்தம், 16 லட்சத்து, 23 ஆயிரத்து, 179 வாக்காளர்கள் உள்ளனர்.

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. மாவட்டத்தில் மொத்தம், 1,888 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணியளவில் தொடங்கியது. காலை நேரத்தில் மந்தமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு பின்னர் விறுவிறுப்படைந்தது. மாலை, 6:00 மணி அளவில் நிறைவடைந்தது.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவான ஓட்டுக்கள் விவரம் அறிவிக்கப்பட்டன. அதன்படி காலை, 9:00 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில், 8.78 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. காலை, 11:00 மணிக்கு, 23.97, பகல் 1:00 மணியளவில், 39.78, மாலை, 3:00 மணிக்கு, 51.60 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் டோக்கன் கொடுத்தவர்கள் மட்டும் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சில இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோளாறு, சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு, கட்சியினரிடையே வாக்குவாதம் என்று இருந்த போதிலும், கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை, 6:00 மணி நிலவரப்படி இறுதியாக கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், 72.96 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. தொடர்ந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்கில் அமைக்கப்பட்ட, ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us