/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஈர நில பகுதிகளில் 8, 9ல்பறவைகள் கணக்கெடுப்பு
/
ஈர நில பகுதிகளில் 8, 9ல்பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : மார் 06, 2025 01:19 AM
ஈர நில பகுதிகளில் 8, 9ல்பறவைகள் கணக்கெடுப்பு
ஓசூர்:ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகம் முழுவதும் இரு கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை உட்பட மொத்தம், 40 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வரும், 8, 9 ஆகிய இரு நாட்கள் காலை, 6:00 முதல், 11:00 மணி வரை நடக்கிறது. கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் வன அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பின் முறைகள், படிவம் பூர்த்தி செய்தல் குறித்த பயிற்சி மற்றும் கணக்கெடுப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்த பயிற்சி இன்று (மார்ச் 6) ஆன்லைன் மூலம்
நடக்கிறது.கணக்கெடுப்பு பணிக்கு வன அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
கணக்கெடுப்பு பணியின் போது, அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதால், முதலுதவி பெட்டிகள் ஒவ்வொரு குழுக்களுக்கும் வழங்கப்பட உள்ளன. பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வகள், கல்லுாரி மாணவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.