/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வியாபாரியிடம் வழிப்பறி போலீசில் சிக்கிய வாலிபர்
/
வியாபாரியிடம் வழிப்பறி போலீசில் சிக்கிய வாலிபர்
ADDED : ஆக 01, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெரிய பெலவர்த்தியை சேர்ந்தவர் ரகு, 30, மாட்டு வியாபாரி; இவர் கடந்த, 29 இரவு நாரலப்பள்ளி கூட்-ரோடு அருகே சென்றபோது, அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து, 750 ரூபாயை ஒருவர் பறித்து சென்றார்.
மகராஜ-கடை போலீசார் விசாரணையில், பணத்தை பறித்தது நாலகுண்ட-லப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ்குமார், 19 என தெரிந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.