/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ரீ வெற்றி விகாஸ் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை
/
ஸ்ரீ வெற்றி விகாஸ் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை
ஸ்ரீ வெற்றி விகாஸ் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை
ஸ்ரீ வெற்றி விகாஸ் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை
ADDED : ஆக 31, 2024 01:06 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, மோளையானுார் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளியில், குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
எறிபந்து போட்டியில், வெற்றி விகாஸ் பள்ளி மாணவியர், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம், கைப்பந்து போட்டியில், 14 மற்றும் 17 வயதுக்கு உட்படோர்
பிரிவில் முதலிடம் பெற்றனர். மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம், கைப்பந்து போட்டியில், 14 மற்றும் 19
வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தீரன் சின்னமலை சேவை அறக்கட்டளை தலைவர் (பொறுப்பு) பழனிசாமி, செயலாளர் டாக்டர் பழனிசாமி, தாளாளர் நைனான், முதல்வர் கலைவாணி, மேலாளர் கனி ஆகியோர்
சான்றிதழ்கள், பரிசு வழங்கி பாராட்டினர். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கருணாகரன், பாரதி ஆகியோரை பாராட்டி சிறப்பித்தனர்.