/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் அறிவியல் மையத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருது
/
வேளாண் அறிவியல் மையத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருது
வேளாண் அறிவியல் மையத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருது
வேளாண் அறிவியல் மையத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருது
ADDED : பிப் 25, 2025 06:46 AM
கிருஷ்ணகிரி: விவசாயிகள், கவுரவ நிதி வழங்கும் திட்டத்தில், பீஹாரில் பிர-தமர் மோடி, விவசாயிகளுக்கு நிதி வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் நேற்று,
நேரடி காணொளி காட்சியாக ஒளிபரப்பப்பட்டது.
இதில், வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்து, திட்டத்தின் முக்கி-யத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்து, வேளாண் அறி-வியல் மையத்தின் சார்பில், சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கி பாராட்டினார். வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள்
குணசேகர், (மண்ணியல்), செந்தில் குமார் (வேளாண் விரி-வாக்கம்), கால்நடை மருத்துவர் ரமேஷ் (கால்நடை அறிவியல்), பூமதி (மனையியல்) மற்றும் திட்ட உதவியாளர் முகமது இஸ்-மாயில் (வேளாண் பொறியியல்) ஆகியோர், இயற்கை பண்-ணையம் மற்றும் அங்கக வேளாண்மை பற்றிய தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும், வேளாண் அறிவியல் மையம் சார்பில், இயற்கை விவ-சாயம் குறித்த கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. கொர-மண்டல் நிறுவன அலுவலர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர், இயற்கை விவசாயம் மற்றும் நானோ டி.ஏ.பி., பற்றி எடுத்துரைத்தனர். இதில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.