/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சந்துாரில் எருது விடும் திருவிழா
/
சந்துாரில் எருது விடும் திருவிழா
ADDED : பிப் 25, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, சந்துார் கிராமத்தில், 39வது ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 250 எருதுகள் பங்கு பெற்றன.
முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய், 2வது பரிசாக, 75,025 ரூபாய், 3வது பரிசாக, 60,025 ரூபாய் என, 70க்கும் மேற்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடந்த எருதுக்கு, முதல் பரிசு வழங்கப்பட்டது. இதை காண, 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் குவிந்-தனர். பர்கூர் சப்-டிவிசனுக்கு உட்பட்ட, 50 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

