sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

/

வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்


ADDED : ஆக 01, 2024 01:46 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில், நேற்று நகரமன்ற சாதாரண கூட்டம், சேர்மன் லட்சுமி தலைமையில் நடந்தது. நகரமன்ற துணைத்தலைவர் நித்யா முன்னிலை வகித்தார். கமிஷனர் புவ-னேஸ்வரன், கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.

தர்மபுரி நகராட்சி சார்பில், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பல்-வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய திட்ட பணிக-ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணியாணை வழங்-குதல், பொதுக்கழிப்பிடம், இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைத்தல் உள்ளிட்ட, 28 பொருட்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான, திட்ட பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். குறிப்-பாக, தர்மபுரி நகரில் அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது.

தெரு நாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டது. நாய்கள் கடித்து இதுவரை, 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்து-வமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, நகராட்சி நிர்-வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு நகரமன்ற தலைவர் மற்றும் கமி-ஷனர் பதிலளித்து பேசுகையில், 'தர்மபுரி நகரில் நாய்களை பிடிக்க, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நகரிலுள்ள அனைத்து சாக்கடை கால்வாய்க-ளையும் துார்வாரும் பணி தொடர்ந்து நடக்கிறது. வார்டுகளில் தேவைகள் அறிந்து பூர்த்தி செய்யப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us