/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு தயார் நிலையில் தீயணைப்பு துறை
/
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு தயார் நிலையில் தீயணைப்பு துறை
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு தயார் நிலையில் தீயணைப்பு துறை
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு தயார் நிலையில் தீயணைப்பு துறை
ADDED : ஆக 01, 2024 01:46 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் தீயணைப்பு மீட்பு நிலையத்தில், தயார் நிலையி-லுள்ள மீட்பு தளவாடங்களை, தீயணைப்பு உதவி மாவட்ட அலு-வலர் கலைச்செல்வன் ஆய்வு செய்தார்.
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அதிக-ளவு பெய்கிறது. இதனால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.எஸ்ஆர்., ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்-ளன. இதையடுத்து அணை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில், தற்காப்பு சிறப்பு தளவாடங்கள் உபகரணங்கள், ரப்பர் படகு, ரோப் லான்சர், பாதுகாப்பு உடைகள், ரப்பர் படகுக்கு மோட்டார் மற்றும் தீயணைப்பு நிலைய ஆம்புலன்ஸ், தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய சிறிய நீர் தெளிப்பு வாகனம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கால் அசம்பாவிதம் ஏற்-பட்டால், அதை தடுக்க, இங்குள்ள வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதை உதவி மாவட்ட தீய-ணைப்பு அலுவலர் கலைச்செல்வன் ஆய்வு செய்தார். அப்-போது, ஒகேனக்கல் தீயணைப்பு மீட்பு குழு நிலைய அலுவலர் ராஜா மற்றும்
தீயணைப்பு மீட்பு குழுவினர்
உடனிருந்தனர்.