/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அடிப்படை வசதிகள் செய்யாததால் மாநகராட்சியில் மக்கள் சாலை மறியல்
/
அடிப்படை வசதிகள் செய்யாததால் மாநகராட்சியில் மக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகள் செய்யாததால் மாநகராட்சியில் மக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகள் செய்யாததால் மாநகராட்சியில் மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 02, 2024 06:10 AM
ஓசூர் : ஓசூர் மாநகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர், காளேகுண்டா பகுதியில், கடந்த சில மாதமாக முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால், மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல், சாக்கடை கால்வாயை துார்வாரி பல-மாதமாகிறது. குப்பை அள்ள ஊழியர்கள் வருவதில்லை. தெருவி-ளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால், திருட்டு பயத்தில் மக்கள் உள்ளனர்.
இது தொடர்பாக, மாநகராட்சி நிர்வா-கத்திடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த பார்வதி நகரை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று காலை, 10:10 மணிக்கு ஓசூர், ராயக்-கோட்டை சாலை சந்திப்பிலுள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்-படை வசதிகள் முறையாக இல்லை. குடிநீர் வினியோகம் சீராக இல்லை என மக்கள் குற்றம் சாட்டினர். இதனால், செயற்பொறி-யாளர் ராஜாராம், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சம்பந்தப்-பட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று நேரில் பார்வையிட்டார். பின் உடனடியாக வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதிய-ளித்தார்.