/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி
/
வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி
ADDED : செப் 02, 2024 02:36 AM
ஓசூர்: ஓசூர் அருகே ஒன்னல்வாடியை சேர்ந்தவர் நஞ்சுண்டாரெட்டி மனைவி சுசீலாம்மா, 68, அரசு பள்ளியில் சமையல் உதவியாள-ராக இருந்து ஓய்வு பெற்றவர்; இவரது மகள்களான புஷ்பா, 50, லட்சுமி, 48, ஆகியோர் திருமணமாகி பெங்களூருவில் வசிக்கின்-றனர். வயது முதிர்வால், நஞ்சுண்டாரெட்டி தன் மகள்களுடன் உள்ளார்.
இதனால், சுசீலாம்மா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு, சுசீலாம்மா
வீட்-டிலிருந்து துர்நாற்றம் வந்தது. அக்கம் பக்கத்தினர், ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுசீலாம்மா இறந்து கிடந்தார். அவரது வாய்,
இடது கை விரல்கள், வலது கணுக்-காலில் எலி கடித்த காயங்கள் இருந்தன. சாவிற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் சடலத்தை மீட்டு, மர்ம மரணம் என வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து
போலீசா-ரிடம் கேட்ட போது, 'மூதாட்டி காது, மூக்கில் நகை உள்ள நிலையில், கழுத்தில் கிடந்த, 2 பவுன் நகை மாயமாகி உள்ளது. விசாரித்து வருகிறோம்' என்றனர்.