ADDED : ஜூலை 13, 2011 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே பாம்பு கடித்து விசவாயி
இறந்தார்.தேன்கனிக்கோட்டை அடுத்த கென்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பா
(50).
நேற்று முன்தினம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது,
ராஜப்பாவை நல்லபாம்பு கடித்தது. மயங்கி விழுந்த அவரை உறவினர்கள்
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை
பலனளிக்காமல் இறந்தார். தேன்கனிக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

