/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 05, 2024 10:50 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் என்ரி பவுல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் மரியசாந்தி, மகளிர் வலையமைப்பு செயலாளர் அனுராதா, மகளிர் வலையமைப்பு தலைவர் தவச்செல்வி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக் கல்வி துறையில் புதிதாக வெளியிட்டுள்ள அரசாணை, 243ஐ திரும்பப் பெற்று, பழைய நடைமுறையே முன்னுரிமையில் இருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். உயர்கல்வி படிப்பிற்கு ஊக்க ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டும். 21 மாதகால அகவிலைப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மேற்படிப்பு படித்தவர்களுக்கு பின்னேர்ப்பு அனுமதி வழங்க வேண்டும். எம்மிஸ் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை
எழுப்பினர்.