நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, : ஊத்தங்கரையை அடுத்த, சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலகம் சார்பில், உலக வன தினத்தை முன்னிட்டு, சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார்.
வனவர் பரந்தாமன், ரமேஷ் ஆகியோர் வனப்பகுதிகளை பாதுகாத்தல், வன உயிரினங்களை பாதுகாத்தல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வனப்பகுதியை பாதுகாப்பதற்கான உறுதிமொழி எடுத்தனர்.இதில், பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன், வனத்துறையினர் அர்ஜூன், பாரதி, அரவிந்தகுமார், சக்தி, பொன்னுவேல், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

