நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பெண் மாயம்
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மிடுகரப்பள்ளியை சேர்ந்தவர் மேனகா, 21. அப்பகுதியிலுள்ள தன் அத்தை யசோதம்மா, 50, வீட்டில் வசித்து வந்தார்; ஓசூர் ஆவலப்பள்ளியிலுள்ள உறவினர் சரோஜம்மா வீட்டிற்கு சென்ற மேனகா, நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு மாயமானார். யசோதம்மா புகாரில், காஞ்சிபுரம் மாவட்டம், சீத்தலப்பாக்கம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த முகமது யூசுப், 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நல்லுார் போலீசார் மேனகாவை தேடி வருகின்றனர்.