நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, நவ. 17-
கிருஷ்ணகிரியில், போலி டாக்டர் கைது செய்யப்பட்டு கிளினிக், 'சீல்' வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ், 42. இவர் அதே பகுதியில், 'நடராஜ் கிளினிக்' என்ற பெயரில் கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். மருத்துவம் படிக்காமல் இவர் சிகிச்சை அளிப்பதாக புகார்கள் சென்றன. இதையடுத்து, தேசிய ஊரக சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சண்முகவேல் தலைமையிலான அலுவலர்கள், நேற்று முன்தினம் கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அப்போது நாகராஜ் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. சண்முகவேல் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், நாகராஜனை கைது செய்தனர்.