நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரத்த தான முகாம்
கிருஷ்ணகிரி, நவ. 19-
கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஞ்ரங்தள் சார்பில் கடந்த, 3 ஆண்டுகளாக ரத்த தானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 4வது ஆண்டு ரத்த தான முகாம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடந்தது. இதில், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் திலீப்குமார் தலைமையில், 25க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாலு, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சோமசேகர், இணை அமைப்பாளர்கள் சங்கர், சரவணன், நகர தலைவர் ராம்ராஜ்
உள்பட பலர் பங்கேற்றனர்.

