ADDED : ஜன 23, 2025 01:42 AM
ஓசூர், :ஓசூர், வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் கடந்த, 1 முதல், வரும், 31 வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடந்த வாரம் வாகன டிரைவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓசூர், காமராஜ் காலனி விளையாட்டு மைதானம் அருகே இருந்து துவங்கிய பேரணியை, வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்தவாறு விழிப்புணர்வு பதாகைகளுடன், தாலுகா அலுவலக சாலை, பாகலுார் சாலை வழியாக, வட்டார போக்குவரத்து அலுவலத்திற்கு சென்றனர்.
சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெற்று தான், வாகனங்களை இயக்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக்
கூடாது. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் வாகனங்களை இயக்கக்கூடாது. வீலிங் செய்யக்கூடாது என, ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பயாஸ்
உட்பட பலர் பங்கேற்றனர்.

