தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்

த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்

த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 14, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி:பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிராக, கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மத்திய மாவட்ட, த.வெ.க., சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கண்டிப்பதோடு, இவற்றை தடுக்க தவறிய மாநில அரசை கண்டிக்கின்றோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4 நாட்களுக்கு ஒரு பாலியல் குற்ற சம்பவம் நடந்து வருகிறது.

இதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும், மாநில அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். மும்மொழி கல்வி எங்களுக்கு தேவையில்லை எனக்கூறி, கண்டன கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us