ADDED : மார் 19, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பை கிடங்கில் தீ விபத்து
ஓசூ:ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தின்னுார் ஜீவா நகர் பகுதியில், நுண்ணுயிர் செயலாக்க மையம் உள்ளது. இங்கு குப்பை மறு சுழற்சி செய்யப்பட்டு, உரங்கள் தயார் செய்யப்படுகின்றன. அங்கிருந்த ஒரு டன் அளவிலான பழைய துணிகள் மற்றும் குப்பை நேற்று தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.