/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாய்கள் தொல்லை அதிகரிப்புநடவடிக்கைக்கு கோரிக்கை
/
நாய்கள் தொல்லை அதிகரிப்புநடவடிக்கைக்கு கோரிக்கை
ADDED : மார் 20, 2025 01:24 AM
நாய்கள் தொல்லை அதிகரிப்புநடவடிக்கைக்கு கோரிக்கை
காவேரிப்பட்டணம்:காவரிப்பட்டணத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு செல்கின்றனர். போக்குவரத்து அதிகரித்து காணப்படும் காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு, சேலம் சாலை, கொசமேடு உள்ளிட்ட பகுதிகளில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதில், சாலையில் செல்வோரை கடிப்பது அதிகரித்துள்ளது.
அதேபோல, காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் நாய்கள் சுற்றித்திரிவதும், பள்ளி மாணவியரை கடித்தும் வருகின்றன.
இது குறித்து ஆசிரியர்களும், தங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவேரிப்பட்டணத்தில் அதிகரித்துள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.