ADDED : மார் 20, 2025 01:25 AM
போதை பொருள் தடுப்பு பேரணி
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி, நேசம் தொண்டு நிறுவனம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தியது. கல்லுாரி முதல்வர் விஜயன் துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி கோசமிட்டு சென்றனர். ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்டில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் ஏற்றனர். இதில், அரிமா சங்க தலைவர் ராஜா, நேசம் குணசேகரன், செல்வம், ரஜினி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.