/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு கல்லுாரியில்ரத்த தான முகாம்
/
அரசு கல்லுாரியில்ரத்த தான முகாம்
ADDED : மார் 21, 2025 01:27 AM
அரசு கல்லுாரியில்ரத்த தான முகாம்
கிருஷ்ணகிரி:இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கிருஷ்ணகிரி கிளை, யூத் ரெட் கிராஸ், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி ரத்த மையம் இணைந்து, நேற்று அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், ரத்த தான முகாமை நடத்தின. கல்லுாரி முதல்வர் அனுராதா முகாமை துவக்கி வைத்தார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் செபாஸ்டியன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த மைய குருதி பரிமாற்று அலுவலர் வசந்தகுமார், எம்.சி., பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா, யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில், சேகரித்த ரத்தம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.