/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெல்லட்டி ஊராட்சிபள்ளி ஆண்டு விழா
/
பெல்லட்டி ஊராட்சிபள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 28, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெல்லட்டி ஊராட்சிபள்ளி ஆண்டு விழா
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பெல்லட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தார். பள்ளியில், முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு 'டிவி' வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாடகம் நடந்தது.
பெல்லட்டி, புறம்தின்னா, பங்காநத்தம், நல்ராளப்பள்ளி, ராமாபுரம், கெம்பீரணப்பள்ளி, நஞ்சாரெட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.