/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆக்கிரமிப்புகளை அகற்றிசாக்கடை கால்வாய் பணி
/
ஆக்கிரமிப்புகளை அகற்றிசாக்கடை கால்வாய் பணி
ADDED : மார் 28, 2025 01:42 AM
ஆக்கிரமிப்புகளை அகற்றிசாக்கடை கால்வாய் பணி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., 7வது வார்டுக்கு உட்பட்ட பன்னீர்செல்வம் தெரு, ஆர்.ஐ., அலுவலகம் அருகே சாக்கடை கால்வாய்கள் சேதமாகி, ஆக்கிரமிப்புகளால் சாக்கடை கால்வாயில் தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் டவுன் பஞ்., நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில், 90 மீட்டர் அளவிற்கு, 15வது மானிய நிதிக்குழு திட்டத்தில், 6.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, புதிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்து கூறுகையில், ''இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு பிரச்னை மற்றும், 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் இல்லாமல் இருந்தது. தற்போது மாரியம்மன் கோவில் முதல் ஆர்.ஐ., அலுவலகம் வரை உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, புதிய சாக்கடை கால்வாய் அமைக்கப்பட உள்ளது,'' என்றார்.
காவேரிப்பட்டணம், தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தேங்காய். சுப்ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், டவுன் பஞ்., கவுன்சிலர்கள், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.