/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திம்மராயசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
திம்மராயசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஏப் 01, 2025 01:30 AM
திம்மராயசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ஊத்தங்கரை:ஊத்தங்கரை படப்பள்ளியில் பழமையான திம்மராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் படப்பள்ளி, பட்டக்கானுார், பெருமாள் குப்பம் ஊர்மக்கள் சார்பில், ஸ்ரீராமநவமி தினத்தில், 72ம் ஆண்டு தேர்த்திருவிழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. அர்ச்சகர்கள் பூஜை செய்து, தேர்கட்டும் பணிகளுக்கு பால்கம்பம் நட்டனர். முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி சன்னதியில், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், படப்பள்ளி, பட்டக்கானுார், பெருமாள் குப்பம், தர்மகர்த்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.