/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் தொழிற்சாலைகளுக்குஇடையே கிரிக்கெட் போட்டி
/
ஓசூரில் தொழிற்சாலைகளுக்குஇடையே கிரிக்கெட் போட்டி
ADDED : ஏப் 01, 2025 01:31 AM
ஓசூரில் தொழிற்சாலைகளுக்குஇடையே கிரிக்கெட் போட்டி
ஓசூர்:ஓசூரிலுள்ள தொழிற்சாலைகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், தொழிலாளர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், காவேரி மருத்துவமனை மற்றும் ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் ஆகியவை சார்பில், 6ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து, 48 அணிகள் பங்கேற்றுள்ளன. குளோபல் கால்சியம் நிறுவன உற்பத்தி துறை மூத்த துணைத்தலைவர் கிரிதரா, காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் விஜயபாஸ்கரன், மார்க்கெட்டிங் உதவி பொது மேலாளர் பிந்துகுமாரி, ஓசூர் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் சுந்தரய்யா ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது. 4 வாரத்தில் போட்டிகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மே, 1ல் இறுதி போட்டி நடக்கிறது. முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய், 2ம் பரிசாக, 75,000 ரூபாய், 3ம் பரிசாக, 50,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. காவேரி மருத்துவமனை சீனியர் பொது மேலாளர் ஜோஸ் வர்க்கீஸ் ஜாய் நன்றி கூறினார்.

