/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
/
ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
ADDED : ஏப் 01, 2025 01:31 AM
ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையிலுள்ள ராஜிவ் நகர் உட்பட, 13 இடங் களிலுள்ள ஈத்கா மைதானங்களில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று காலை, 6:30 முதல், 10:00 மணி வரை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில், 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெரியார் நகர் அருகே மசூதியில், பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, தங்கள் வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
* பாகலுார் ஜீவா நகரிலுள்ள ஜாமியா மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு, ஹிந்து தர்ம சேவா சங்கத்தை சேர்ந்தவர்கள், பேரிச்சம்பழம், தண்ணீர் வழங்கி, கட்டித்தழுவி ரம் ஜான் வாழ்த்து தெரிவித்தனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை, மத்துார், காவேரிப்பட்டணத்தில் தொழுகை நடந்தது.
* தர்மபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில், தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையிலுள்ள ஈத்கா ஏரிக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், மாவட்ட தலைமை ஹாஜி பதல கரீம் கலந்து கொண்டார். அதேபோல், தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

