/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு முகாம்
/
போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு முகாம்
ADDED : ஏப் 03, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு முகாம்
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, காரப்பட்டில் காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வரவேற்றார்.
கிருஷ்ணகிரி தீண்டாமை ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜெய்சிங் தலைமை வகித்து, போதை பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சமூக நீதி, மனித உரிமைகள், குழந்தை திருமணம் குறித்து பேசினார். இதில், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். போலீஸ் எஸ்.எஸ்.ஐ., தேவன் நன்றி கூறினார்.

