ADDED : ஏப் 04, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார் மோதி டெய்லர் பலி
ஓசூர்:தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் வீரப்பா, 38, டைலர். இவர் நேற்று முன்தினம் மதியம் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றுள்ளார்.
மரக்கட்டா முனியப்பன் கோவில் அருகே, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த சுசுகி சென் கார் மோதி பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

