/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
/
தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ADDED : ஏப் 09, 2025 01:32 AM
தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி:தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தியதை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கவர்னர் மசோதாவை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், அந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் எனவும் நேற்று தீர்ப்பளித்தது. இதை வரவேற்று, தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதன்படி, கிருஷ்ணகிரி, 5 ரோடு ரவுண்டானா அருகில், தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி ஆகியோர் தலைமையில், தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.
* ஓசூர் மாநகர தி.மு.க., சார்பில், அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பகுதி செயலாளர் திம்மராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஊத்தங்கரையில் நடந்த நிகழ்ச்சியில், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் பார்த்திபன், நகர அவை தலைவர் தணிகை குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகி
கள் கலந்து கொண்டனர்.

