sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வழக்குகளுக்கு உடனடிதீர்வு காண விழிப்புணர்வு

வழக்குகளுக்கு உடனடிதீர்வு காண விழிப்புணர்வு

வழக்குகளுக்கு உடனடிதீர்வு காண விழிப்புணர்வு


ADDED : ஏப் 10, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வழக்குகளுக்கு உடனடிதீர்வு காண விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்குகளில் உடனடி தீர்வு காணும் வகையிலான சமரச மையம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சமரச மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லதா தலைமை வகித்து துவக்கி வைத்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் சமரச இணக்க முறை மையத்தின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்குகளில் ஆஜராகும் வழக்காடிகளோ அல்லது அவர்கள் வழக்கறிஞரோ, வழக்கை சமரச மையத்திற்கு அனுப்பும் படி கூறலாம்.

அதில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, உடன் தீர்வு காணலாம். முடியாத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடரலாம். வழக்கு சுமூகமாக முடிக்கப் பட்டால், நீதிமன்ற கட்டணத்தை உங்களிடம் திருப்பி ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும்.

இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய பேரணி, ராயக்கோட்டை சாலை வழியாக கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் நிறைவடைந்தது.

இதில் கல்லுாரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு துண்டு

பிரசுரங்கள் வழங்கப்பட்டன.கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி சுதா மற்றும் நீதிபதிகள் மாவட்ட எஸ்.பி.,

தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us