sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உரூஸ் திருவிழாவில் சந்தனக்குட ஊர்வலம்

உரூஸ் திருவிழாவில் சந்தனக்குட ஊர்வலம்

உரூஸ் திருவிழாவில் சந்தனக்குட ஊர்வலம்


ADDED : ஏப் 11, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உரூஸ் திருவிழாவில் சந்தனக்குட ஊர்வலம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, டோல் கேட் அருகே சங்கல்தோப்பு தர்காவில், ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகை முடிந்த பின், 2 நாட்கள் உரூஸ் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் துவங்கிய இவ்விழாவில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

சங்கல்தோப்பு தர்கா கமிட்டி தலைவர் நவாப் தலைமையில் நடந்த, 2வது நாள் விழாவில், கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை பகுதியில் இருந்து அலங்கரித்த வாகனத்தில், சந்தனக்குட ஊர்வலம் நடந்தது. நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்று, அதிகாலை கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தர்காவை அடைந்தது. விழாவில், கோட்டை பகுதி ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சந்தனம், புஷ்பம், பழங்கள் அடங்கிய சீர்வரிசைகளை விழா கமிட்டி தலைவர் நவாப் மற்றும் இஸ்லாமிய சகோதரர்களிடம் வழங்கினர். அப்பொருட்கள் அனைத்தையும் சந்தனக்குடம் ஊர்வலத்துடன் தர்காவுக்கு கொண்டு சென்றனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, தர்கா கமிட்டி செயலாளார் கவுஸ்ஷெரிப், பொருளாளர் அஸ்கர்அலி, நிர்வாகிகள் அமீர்சுஹேல், அத்தாவுல்லா ஷெரீப், முன்னாள் கவுன்சிலர் லியாகத் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us