/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடித்த பாம்புகளுடன்ஜி.ஹெச்., வந்த இருவர்
/
கடித்த பாம்புகளுடன்ஜி.ஹெச்., வந்த இருவர்
ADDED : ஏப் 11, 2025 01:26 AM
கடித்த பாம்புகளுடன்ஜி.ஹெச்., வந்த இருவர்
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று இப்பள்ளியில் மாணவர்கள் இருந்த அறைக்குள், 6 அடி நீள சாரைப்பாம்பு புகுந்தது. புளியம்பட்டி பகுதியை சேர்ந்த குமரேசன், 48, என்பவர், பாம்பை பிடிக்க முயன்றபோது அவரை கடித்தது. இருந்தாலும் கடித்த பாம்புடன், போச்சம்பள்ளி ஜி.ஹெச்.,க்கு சிகிச்சை பெற சென்றார்.
அதேபோல், ஆனந்துாரை சேர்ந்தவர் முருகானந்தம், 55, விவசாயி. அவரின் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிய போது, அவரை பாம்பு கடித்துள்ளது. அவர் கடித்த பாம்புடன் போச்சம்பள்ளி ஜி.ஹெச்.,க்கு சிகிச்சைக்கு சென்றார். அரை மணி நேரத்தில், 2 பேர் பாம்பு கடித்து, கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்தது, நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அங்கு வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர், 2 பாம்புகளையும் பறிமுதல் செய்து, தொகரப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர்.