/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொலையான மூதாட்டி குடும்பத்திற்கு உதவி
/
கொலையான மூதாட்டி குடும்பத்திற்கு உதவி
ADDED : ஏப் 15, 2025 01:54 AM
கொலையான மூதாட்டி குடும்பத்திற்கு உதவி
சூளகிரி:சூளகிரி அருகே, அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரப்பா. இவரது மாமியார் நாகம்மா, 65. இவர் கடந்த மாதம், 19 மதியம் வீட்டில் தனியாக இருந்த போது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. மர்ம நபர்கள் வீட்டிற்கு தீ வைத்து சென்றதால், மின்சாதன பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணிகள், சமையல் பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. இதனால் முனிசந்திரப்பா குடும்பத்தினர் வீட்டை இழந்து தவித்து வருகின்றனர்.
இதையறிந்த ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் நாகேஷூடன் சென்று, முனிசந்திரப்பா குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், 40,000 ரூபாய் மதிப்பில், 6 மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து விதமான சமையல் பொருட்களை வாங்கி கொடுத்தார். அப்போது, நாகம்மா குடும்பத்தினர், அரசு சார்பில் வீடு கட்டி தர வேண்டும் என, எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்தனர். அதை பெற்ற அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தி.மு.க., மாவட்ட பிரதிநிதி முனிராஜ், இளைஞரணி நாகபூஷனம், விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.