/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு கல்லுாரியில் ஐம்பெரும் விழா
/
அரசு கல்லுாரியில் ஐம்பெரும் விழா
ADDED : ஏப் 16, 2025 01:01 AM
அரசு கல்லுாரியில் ஐம்பெரும் விழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி ஆண்டுவிழா, முத்தமிழ், கவின் கலை, நுண்கலை மற்றும் மாணவர் பேரவை நிறைவு விழா என ஐம்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கணிதத்துறை உதவி பேராசிரியர் முனைவர் முருகேசன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அனுராதா தலைமை வகித்தார்.
தமிழ்த் துறைத்தலைவர் வெங்கடேசன் கல்லுாரி அறிக்கை வாசித்தார். திருவெறும்பூர் அரசு கலைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் ரோஸ்மேரி, இன்றைய சூழலில் மாணவர்களுக்கு கல்வியின் பயன் குறித்த, அப்துல் கலாம் கருத்துக்களை மேற்கோள் காட்டி பேசினார். கல்லுாரி மாணவ பேரவை சார்பில், கல்வி, விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய, 210 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்றன. பேராசிரியர்கள் சரிதா மற்றும் மாரியப்பன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
பேராசிரியர்கள் செல்வசீலன், ஜோதிபாசு, கவின்கலை பொறுப்பாளர் மணிமேகலை, நுண்கலை மன்றப் பொறுப்பாளர் மாரியப்பன், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.