/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பங்குனி உத்திர தேரோட்டம் நிறைவு
/
பங்குனி உத்திர தேரோட்டம் நிறைவு
ADDED : ஏப் 17, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி:நங்கவள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவில் சார்பில் பங்குனி உத்திர தேரோட்ட விழா கடந்த, 3ல் தொடங்கியது.
5 நாள் தேரோட்டம் கடந்த, 12ல் தொடங்கியது. அதன், 5ம் நாளான நேற்று, வடக்கு ரத வீதியில் இருந்து தேர் புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தேரை இழுத்து வந்து, மாலை, 6:00 மணிக்கு நிலை சேர்த்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவு சத்தாபரணம், நாளை கொடியிறக்குதல், நாளை மறுநாள் இரவு, 7 சுற்று உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.