ADDED : மே 20, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூரிலிருந்து கெலமங்கலம் செல்லும் சாலையிலுள்ள அக்கொண்டப்பள்ளி பகுதியில், 850 மீட்டர் துாரத்திற்கு, இரு வழிச்சாலை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சாலை நடுவே சென்டர் மீடியன் பகுதியில், மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது.
அதேபோல், ஓசூரிலுள்ள தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகே இருந்து, பேலகொண்டப்பள்ளி வரை ஆங்காங்கு இருவ
ழிச்சாலை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியிலும் சாலை நடுவே, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த இரு சாலைகளிலும் மொத்தம், 3,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.