/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அண்ணாதுரை சிலையிடம் முறையிட்ட அன்புமணி
/
அண்ணாதுரை சிலையிடம் முறையிட்ட அன்புமணி
ADDED : ஆக 19, 2025 03:30 AM
ஓசூரில், அன்புமணி தன் உரையை முடிப்பதற்கு முன் பேசியதாவது: கிருஷ்ணகிரியில் நான் பேசிய போது, எதிரே அண்ணாதுரை சிலை இருந்தது. அவருக்கு வணக்கம் வைத்து விட்டு தான், மேடை ஏறினேன். அப்போது அவரிடம், நீங்கள் துவங்கிய கட்சி. இப்படி கொள்ளைக்காரர்களிடம் விட்டு சென்று விட்டீர்களே. உங்கள் கொள்கையை ஒன்றை கூட, தி.மு.க.,வினர் பின்பற்றுவதில்லை.
சமூக நீதி, சுயமரியாதை, தமிழ், மொழி, பண்பாடு, மது ஒழிப்பு நேர்மையான ஆட்சி போன்றவற்றுக்காக தான் அண்ணாதுரை, தி.மு.க.,வை துவங்கினார். இதில் ஒன்றை கூட இன்றைக்கு, தி.மு.க.,வினர் கடைபிடிக்கவில்லை. சமூக நீதி, நேர்மையான ஆட்சி, மொழி, மதுவிலக்கு பற்றி, தி.மு.க.,விற்கு தெரியாது. போதும், தி.மு.க., ஆட்சியை அகற்றுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.