நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, :ரிப்பட்டணம் அடுத்த கொசமேடு, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் தவமணி, 56. இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். இவர், வீட்டின் முன்புறம், 'தவமணி பீட்டர்' என்ற பெயரில் கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். கடந்த, 5 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்தார். இவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என மருத்துவத்துறை அலுவலர்களுக்கு புகார் சென்றது.
இதையடுத்து, நேற்று போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் நாராயணசாமி மற்றும் அலுவலர்கள், தவமணி நடத்தும் கிளினிக்கில் ஆய்வு செய்தனர். இதில், அவர் பிளஸ் 2 மட்டுமே படித்து விட்டு, மருத்துவம் பார்த்தது தெரிந்தது. இதையடுத்து, முதன்மை மருத்துவ அலுவலர் நாராயணசாமி அளித்த புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், போலி மருத்துவர் தவமணியை கைது செய்தனர்.

