/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தல்
/
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தல்
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தல்
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தல்
ADDED : நவ 26, 2025 02:06 AM
காரிமங்கலம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் உத்தரவின் படி, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் தலைமையில், நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.
இதில், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வாடகையாக வசூலிக்க வேண்டும். விபத்தில் சிக்கும் நோயாளிகளின் உடமைகளை பாதுகாக்க வேண்டும். அவசர காலத்தில் நோயாளிகள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் உயிர் முக்கியமானது. எனவே, அதை அறிந்து செயல்பட வேண்டும். 'கோல்டன் ஹவர்ஸ்' என்பது மிக மிக முக்கியமான ஒன்று. பாதுகாப்பான முறையில், குறித்த நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ்களில் நோய்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அதற்கேற்ப மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென, ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு, இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார்.

