/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தட்டச்சு தேர்வுகள் 1,102 பேர் பங்கேற்பு
/
தட்டச்சு தேர்வுகள் 1,102 பேர் பங்கேற்பு
ADDED : மார் 03, 2025 01:46 AM
பங்கேற்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், கடந்த, 2 நாட்களாக தட்டச்சு தேர்வுகள் நடந்தது. 2வது நாளான நேற்று, ஆங்கிலம், தமிழ், இளநிலை, முதுநிலை மற்றும் உயர்வேக தேர்வு ஆகிய பாடங்களில், தட்டச்சு தேர்வுகள் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வணிகவியல் தட்டச்சுப் பள்ளிகளில் இருந்து, 1,102 மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர். தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் சாரதாவின் மேற்பார்வையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் சுப்பையா, இளங்கோ மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தட்டச்சு தேர்வுகள் நடந்தன.
இத்தேர்வுகளை பறக்கும் படையினர் காணொலி காட்சி மூலமாகவும், நேரில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.