/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலமங்கலத்தில் 13ம் நுாற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு
/
கெலமங்கலத்தில் 13ம் நுாற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு
கெலமங்கலத்தில் 13ம் நுாற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு
கெலமங்கலத்தில் 13ம் நுாற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு
ADDED : பிப் 14, 2025 01:11 AM
கெலமங்கலத்தில் 13ம் நுாற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து கெலமங்கலம் அருகே சந்தனப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. அதில், 4 அடி உயர பழைய மாரியம்மன் கோவில் சுவற்றில் இருந்த, 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பூர்வாதராயர்கள் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கல்வெட்டை படியெடுத்த, ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:கடந்த, 13ம் நுாற்றாண்டில், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், இப்பகுதியை ஆண்ட பூர்வாதராயர் வம்சத்தை சேர்ந்த தாமத்தாழ்வார் என்பவர், இளையாழ்வார் என்பவருக்கு, 2 'கண்டகம்' விளையும் நிலத்தை தானமாக அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 'கண்டகம்' என்பது, பழந்தமிழர் கையாண்ட ஒரு முகத்தல் அளவை. அதாவது, 4 படி ஒரு வல்லம், 40 வல்லம் ஒரு 'கண்டகம்'. அதன்படி, 320 படி விதை நெல் விளைகின்ற நிலபரப்பை, அதாவது, 100 ஏக்கர் அளவுக்கு உள்ள கழனியை தானமாக அளித்துள்ளதை காணும் போது, இளையாழ்வார் என்பவன் படைத்தலைமை பெற்று அரசுக்கு வெற்றியை ஈட்டித்தந்திருப்பான் என்பது தெளிவாகிறது.
இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், காப்பாட்சியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ஓவர்சியர் மூர்த்தி, ராஜப்பா, பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.