/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரட்டை கொலையில் 2வது நாளாக விசாரணைகொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

ADDED : மார் 14, 2025 01:49 AM
இரட்டை கொலையில் 2வது நாளாக விசாரணைகொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
ஓசூர்:ஓசூர் அருகே, இரட்டை கொலை வழக்கில், 2வது நாளாக மாவட்ட எஸ்.பி., தங்கதுரை விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க, 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஒன்னல்வாடியை சேர்ந்தவர் லுார்துசாமி, 70. இவரது மனைவி தெரசா, 65, உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். லுார்துசாமியை அவரது மனைவியின் தங்கை எலிசபெத், 60, என்பவர் கவனித்து வந்தார். நேற்று முன்தினம் லுார்துசாமியும், அவரது கொழுந்தியாள் எலிசபெத்தும் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் அவர்களை சரமாரியாக வெட்டிக் கொன்று, வீட்டிலிருந்த இரு சோபாக்களுக்கு தீ வைத்து சென்றனர். இக்கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., தங்கதுரை நேற்று, 2வது நாளாக விசாரணை நடத்தினார். கொலையான எலிச பெத்தின் காதுகள் அறுக் கப்பட்டும், கழுத்தில் காயங்களும் உள்ளதால், அவரிடம் இருந்து, நகைகளை பறித்து சென்றது தெரிந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'இந்த இரட்டை கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, ஓசூர் டி.எஸ்.பி., (பொறுப்பு) சிந்து தலைமையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 'சிசிடிவி' காட்சி கள் மற்றும் சில தகவல்களை வைத்து விசாரித்து வருகிறோம்' என்றனர். இரட்டை கொலை தொடர்பாக நேற்று மாலை ஓசூருக்கு, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் டி.ஐ.ஜி., உமா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள வயதானவர்களை குறிவைத்து, சில சம்பவங்கள் நடந்துள்ளதால், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டனர்.