sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரகேஸ்வர சுவாமி தேரோட்டம்3 மாநில பக்தர்கள் தரிசனம்

/

அரகேஸ்வர சுவாமி தேரோட்டம்3 மாநில பக்தர்கள் தரிசனம்

அரகேஸ்வர சுவாமி தேரோட்டம்3 மாநில பக்தர்கள் தரிசனம்

அரகேஸ்வர சுவாமி தேரோட்டம்3 மாநில பக்தர்கள் தரிசனம்


ADDED : பிப் 27, 2025 02:01 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரகேஸ்வர சுவாமி தேரோட்டம்3 மாநில பக்தர்கள் தரிசனம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, மதகொண்டப்பள்ளியில், பார்வதாதேவி உடனுறை அரகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு, கிரிஜா கல்யாணம் மற்றும் தேரோட்ட விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை, 6:00 மணிக்கு கங்கை பூஜை, கோ பூஜை, கணபதி பூஜை, கொடியேற்றம், மாலை, 4:00 மணிக்கு கிரிஜா திருக்கல்யாணம் நடந்தன.

நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பார்வதா தேவி உடனுறை அரகேஸ்வர சுவாமிக்கு ருத்ர அபிஷேகம், மகா மங்களாரத்தி நடந்தன. காலை, 11:30 மணிக்கு, மதகொண்டப்பள்ளி ராஜ வீதிகளில் தேரோட்டம் நடந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்றிரவு, 10:00 மணிக்கு பல்லக்கு உற்சவம், வாணவேடிக்கை நடக்கிறது.

மணல், கல் கடத்திய

3 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை வி.ஏ.ஓ., தினேஷ்குமார் பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 6 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. தினேஷ்குமார் புகார் படி, ஊத்தங்கரை போலீசார், லாரியை பறிமுதல் செய்து

விசாரிக்கின்றனர்.

* துறிஞ்சிப்பட்டி வி.ஏ.ஓ., அருண் தலைமையிலான அதிகாரிகள், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற லாரியை சோதனையிட்டதில், கற்கள் கடத்தியது தெரிந்தது-. அருண் புகார் படி, ஊத்தங்கரை போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

* தளி வி.ஏ.ஓ., குமரேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கலுகொண்டப்பள்ளியில் உள்ள கும்ளாபுரம் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அனுமதி சீட்டின்றி, கலுகொண்டப்பள்ளியில் இருந்து ஓசூருக்கு, 4 யூனிட் எம்.சாண்ட் கொண்டு சென்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர், உரிமையாளரை தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us