/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு மனைவி உட்பட 3 பேர் கைது
/
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு மனைவி உட்பட 3 பேர் கைது
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு மனைவி உட்பட 3 பேர் கைது
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு மனைவி உட்பட 3 பேர் கைது
ADDED : பிப் 25, 2025 06:47 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை அருகே உள்ள காமசந்திரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 32. கூலித்தொழிலாளி; இவர் மனைவி கோகிலா, 25. இவர்களுக்கு, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 19 அதிகாலை, 5:00 மணிக்கு, பைக்கில் சென்ற பெரியசாமியை பின்தொடர்ந்து சென்ற இருவர், ஊரின் அருகே வழிமறித்து அரிவாளால் தலையில் வெட்டினர். காயமடைந்த பெரியசாமி புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்தனர்.
இதில், சூளகிரி அருகே சூழல்தின்னை கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுவனுக்கும், மனைவி கோகிலாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை பெரியசாமி கண்டித்துள்ளார். இதை தன் கள்ளக்காதல-னிடம் கோகிலா கூறியுள்ளார். இதையடுத்து, சூழல்தின்னையை சேர்ந்த வெங்கட்ராமன், 24, என்பவருடன் சென்ற சிறுவன், பெரி-யசாமியை அரிவாளால் வெட்டி உள்ளார். இதையடுத்து, கோகிலா, கள்ளக்காதலனான சிறுவன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய, 3 பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.