தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ரூ.3.54 கோடியில் உபகரணங்கள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ரூ.3.54 கோடியில் உபகரணங்கள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ரூ.3.54 கோடியில் உபகரணங்கள்


ADDED : மார் 19, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ரூ.3.54 கோடியில் உபகரணங்கள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சூளகிரி பவர் கிரேடு நிறுவனம் தன் சமூக பொறுப்பு நிதியில், 3.54 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி முன்னிலை வகித்தார். மருத்துவ உபகரணங்களை, பவர் கிரேடு நிறுவன தலைமை பொது மேலாளர் ராவ், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.

இந்த மருத்துவ உபகரணங்கள், ரத்தத்தில் சர்க்கரை, புரோட்டீன் அளவு கண்டறிதல், ரத்த நோய் சிகிச்சைகள், மயக்கவியல் மருத்துவம், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை அரங்கு, மஞ்சள் காமாலை கண்டறிதல், உள்ளிட்டவைகளுக்கு உதவும். கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லுாரிக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை, இதயவியல் சிறப்பு பிரிவுகள் மற்றும் கேத் லேப் உள்ளிட்டவைகளும் ஏற்படுத்த உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

பவர் கிரேடு நிறுவன மேலாளர்கள் ஜெயபிரகாஷ், சரவணகுமார், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சந்திரசேகர், துணை முதல்வர் சாத்விகா, மருத்துவ அலுவலர்கள் செல்வராஜ், மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us