/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'குரூப் - 4' தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு
/
'குரூப் - 4' தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு
'குரூப் - 4' தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு
'குரூப் - 4' தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 25, 2025 12:45 AM
'குரூப் - 4' தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று கடந்த, 2024ல் நடந்த, 'குரூப் - 4' தேர்வில் வெற்றி பெற்ற, 8 பேருக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இதில், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசுகள்
வழங்கப்பட்டன. மேலும், தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்பில் பயின்று வரும், 55 மாணவர்களுக்கு பாடக்குறிப்புகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோனிஷா, சுந்தரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.