ADDED : பிப் 12, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனீக்கள் கொட்டி 4 பேர் காயம்
ஓசூர்,:ஓசூர், அலசநத்தம் சாலையிலுள்ள பிஸ்மில்லா நகரில், ஒரு வீட்டின் மாடியில், பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. நேற்று தேன் கூடு கலைந்ததில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை தேனீக்கள் கொட்டின. இதில், ஓசூர் சின்ன எலசகிரி ஜோசப், 44, காமராஜ் நகர் மகேந்திரன், 39, பாகலுார் சின்னமுத்து, 63, மத்திகிரி வசந்த், 45, ஆகிய நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. ஓசூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேனீக்கள் கொட்டியதால், வீட்டின் மாடியிலுள்ள தேன்கூட்டை அகற்ற, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.